கோகுலாஷ்டமிகோலாட்டம் ஊஞ்சல் உற்சவவிழா

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோகுலாஷ்டமி உற்சவத்தை முன்னிட்டு துளசி பூஜை ராதாகிருஷ்ணன் ஊஞ்சல் உற்சவம் கீர்த்தனை கோலாட்டம் உறியடி நடைபெற்றது. திரளானோர் பங்கேற்றனர்

Update: 2024-09-01 01:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் மங்கல சக்தி சமிதி சுபிக்ஷா ஹிந்தி வித்யாலயா சார்பில் கோகுலாஷ்டமி உற்சவ விழா நடைபெற்றது. ராதை கிருஷ்ணர் ஊர்வலமாக மேடைக்கு கொண்டுவரப்பட்டு துளசி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ராதாகிருஷ்ணன் ஊஞ்சல் உற்சவம் கோலாட்டம் உறியடி கிருஷ்ணருக்கு உகந்த பாடல்கள் நடனங்களுடன் கீர்த்தனைகள் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். சிறுவர் சிறுமியர் கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

Similar News