சிவன் கோவிலில் சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
தூத்துக்குடி சிவன் கோவிலில் சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஆவணி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பிரதோஷ தினத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் அதுவும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் வெகு சிறப்பு வாய்ந்ததாகும் இன்று ஆவணி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால் ,தயிர், தேன் ,பழங்கள், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் மலர்கள் மற்றும் சந்தன அலங்காரத்தில் சுவாமி மற்றும் நந்தி பகவான் காட்சியளித்தார் இதைத் தொடர்ந்து சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி மற்றும் நந்தி பகவானை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் சிவன் கோவில் அறங்காவல குழு தலைவர் கந்தசாமி , கோவில் நிர்வாக குழு அலுவலர் தமிழ்ச்செல்வி அறங்காவலர் குழு உறுப்பினர் பி எஸ் கே ஆறுமுகம் மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.