திருப்பத்தூரில் மாணவியர்‌ விடுதியை எட்டிப் பார்த்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது

திருப்பத்தூரில் மாணவியர்‌ விடுதியை எட்டிப் பார்த்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது

Update: 2024-09-01 05:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாணவியர்‌ விடுதியை எட்டிப் பார்த்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியின் அருகில் திருப்பத்தூர், புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் பெட்ரிக் (38) கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார் இவர் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு மாணவிகள் தங்கும் விடுதி அறையை ஜன்னலில் எட்டிப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த அறையில் இருந்த மாணவிகள் கத்திக்கூச்சல் இட்டுள்ளனர். இதனால் பெட்ரிக் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இதுகுறித்து சத்தம் கேட்டு வந்த விடுதியின் காப்பாளர் மாணவிகளிடம் விவரத்தை கேட்டறிந்து இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலிசார் பெட்ரிக் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News