மரியன்னை கல்லூரியில் தாவர ஜீன பொறியியல் குறித்த பயிற்சி!
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி தாவரவியல் துறையில் டெல்லி உயிரியல் நுட்பத்துறை (DBT) நிதியுதவியில் தாவர ஜீன பொறியியல் குறித்த இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி தாவரவியல் துறையில் டெல்லி உயிரியல் நுட்பத்துறை (DBT) நிதியுதவியில் தாவர ஜீன பொறியியல் குறித்த இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிப்பயிற்சிக்கு சென்னை SRM இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி யில் ஜீன பொறியியல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். டி. ரெக்ஸ் அருண்ராஜ் முக்கிய உரையாளர் ஆகக் கலந்து கொண்டார். பயிற்சியில் தாவர ஜீன பொறியியலின் முக்கிய அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள், மற்றும் அதன் செயல் முறைகள் குறித்து ஆராய்ந்து, மாணவர்கள் பயிற்சியில் நேரடியாக ஈடுபட்டனர்.