கரூரில், தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கரூரில், தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கரூரில், தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். கரூர், தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில், ஊட்டச்சத்து வார கொண்டாட்டம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி விழிப்புணர்வு பேரணி, ஊட்டச்சத்து திருவிழா, இலவச ஊட்டச்சத்து ஆலோசனை மையம் திறப்பு விழா என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று அரசு கலைக்கல்லூரியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது, தாந்தோணிமலை கடைவீதி வழியாக, மில்கேட் வரை சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் ஊட்டச்சத்து உணவுகள், உணவு முறைகள், அனைவருக்கும் சத்தான உணவு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.