தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இதில் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.