அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி பகுதியில் நியாய விலைக் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்
அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி பகுதியில் நியாய விலைக் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்
விருதுநகர் தேர்தல் நேரத்தில் அறிவித்தது போல தாமிரபரணி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது; விரைவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படும் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி முனியப்ப சாமி கோவில் தெருவில் ரூ 13 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அமைச்சர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து அன்பு நகர், நெசவாளர் காலனி, பாரதிதாசன் தெரு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் எம்டிஆர் நகரில் ரூ 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும் மாணிக்கம் நகரில் ரூ 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பூங்காவினையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தேர்தல் நேரத்தில் அறிவித்தது போல தாமிரபரணி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அதேபோல் வைகை குடிநீரும் சுத்திகரிப்பதற்காக கட்டங்குடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வைகை குடிநீரும் தாமிரபரணி குடிநீர் போல சுத்தமாக பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.