சரக்கு வாகன ஓட்டுநரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல்
சரக்கு வாகன ஓட்டுநரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல்
திருச்சுழி அருகே சரக்கு வாகனத்தின் ஓட்டுநரை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு; மர்ம கும்பல் தப்பி ஓட்டம்; திருச்சுழி போலீசார் விசாரணை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காளிக்குமார் சரக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி - இராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென காளிக்குமார் ஒட்டி சென்ற சரக்கு வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வழிமறித்துள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய காளிக்குமாரை அந்த மர்ம கும்ப கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல் நிலைய போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளிக்குமாரை மீட்டு திருச்சொலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து முன் விரோதம் காரணமாக கொலை அரங்கேறியதா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய மர்ம கும்ப கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.