காரில் சென்ற வழக்கறிஞரை தடுத்து தாக்கிய நபர் கைது
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவல் பகுதியில் காரில் சென்ற வழக்கறிஞரை தாக்கிய நபர் கைது . அவர் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதால் உறிய விசாரணை வைக்க கோரிக்கை
மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் 50. இவர் சென்னை மற்றும் மயிலாடுதுறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு கார்மூலம் செம்பனார்கோவில் காவல் நிலையம் தாண்டி செல்லும் பொழுது டூவீலரில் விரட்டி வந்து வழிமறித்த குடிபோதை ஆசாமி, காரின் கதவை திறந்து வழக்கறி வெளியே இழுத்து, எங்க சமுதாயத்துக்கு நீ பெரிய தலைவரா.. எங்களுக்கு ஒரே தலைவர் பவுன்ராஜ் (அதிமுகமாவட்ட செயலாளர்) தான் என வழக்கறிஞரி ன் சட்டையை பிடித்து இழுத்து கிழித்தும்அடித்து மிரட்டல் விடுத்துள்ளார் . இது கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அவன் தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கமித்ரன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் செம்பனார்கோவில் வல்லம் பகுதியை சேர்ந்த பாலு மகன் ரகு(42). என்பது குடிபோதையில் இச்செயலை செய்தது அவர்தான் என்றும் தெரியவந்தது. அவரை கைது செய்து நிலையம் கொண்டு வந்து அவர் மீது நான்கு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கமித்ரன் கூறுகையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து கூலிப்படை வைத்தும் இதுபோன்று ரவுடிகளை தூண்டி விட்டும் என்னிடம் வேண்டுமென்று தகராறு செய்து வருகிறார் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். என் உயிருக்கு உடமைக்கும் பவுன்ராஜிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2012லிருந்து இதுநாள்வரை ஐந்து முறை அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.