புதுக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் இன்று முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மினி அங்கன்வாடி மையத்தில் பணிபுரிவர்களுக்கு 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.