அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையினால் மருத்துவமனை வளாகத்திற்குள் மழை தண்ணீர் புகுந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய அதிநவின உபகரண பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பழுது அடைந்தது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது கன மழையினால் பாதிப்பு அடைந்த மருத்துவமனை உபகரண பொருட்கள் அனைத்தும் புதுபித்து சரிசெய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனமழையினால் பாதிப்பு அடைந்த பகுதிகள் மற்றும் சரிசெய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களை இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளதா உள்ளிட்டவைகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மதுத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.