ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவரை தாளாளர் தர்வேஷ் முகைதீன் , ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் சிராசுதீன் உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.
ஆண்டிபட்டியில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர் மூன்று போட்டிகளில் முதல் இடம் பெற்று சாதனை படைத்தார்.ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.அதில் புரபசனல் இன் லைன் பிரிவில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர் விமல் 100 மீ ரோடு போட்டியில் முதல் இடத்தையும், 400 மற்றும் ஆயிரம் மீட்டர் ரிங் ரேஸ் போட்டியில் முதல் இடம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவரை தாளாளர் தர்வேஷ் முகைதீன் , ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் சிராசுதீன் உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.