ஆண்டிபட்டியில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜான்,ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் லோகி ராஜன் பங்கேற்பு
ஆண்டிபட்டியில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் . தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அனைத்து பிள்ளைமார் நல சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கார் ஸ்டாண்டில் வ .உ. சி. யின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியை அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் லோகிராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருடன் ஒன்றிய குழு துணை தலைவர் வரதராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அவரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தொடங்கி வைத்தார். அவருடன் நகரச் செயலாளர் பூஞ்சோலை சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் காசிராஜன், ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், திருமலை நாகராஜ் ஆகியோர் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்கள் .நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் ,ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் வந்திருந்து வ. உ. சி. யின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் .காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். ஆண்டிபட்டி நகர நல கமிட்டி சார்பில் அதன் தலைவர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து பிள்ளைமார் நல சங்கம் சார்பில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.