ராமநாதபுரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இருக்கு ஆனா இல்லை
திருவாடானை தாலுகா தலைமை இடமாகவும், சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு அனைத்து அரசு அலுவலகங்களும் நீதிமன்றம், காவல் நிலையம் என அனைத்து உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு பிஎஸ்என்எல் சேவை மூலமே இணையதளங்கள், லேண்ட்லைன் போன்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பி எஸ் என் எல் அலுவலகத்தில் இணையத்தில் சேவை மற்றும் இதர சேவைகளுக்காக உதவி பொறியாளர் உள்ளிட்ட டெக்னீசியன்கள் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது எந்தவித அலுவலர்களும் இல்லாமல் பூட்டி கிடக்கிறது. பூட்டியே கிடப்பதால் அலுவலக கட்டிடம் பழுதடைந்து பாலடைந்து கிடக்கிறது மேலும் காவலர் ஒருவர் இருந்தார். அவரும தற்போது இல்லை இதனால் இணையதள சேவை, மற்றும் இதர சேவையில் பழுது ஏற்பட்டால் பிஎஸ்என்எல் அலுவலகத்தை அணுக முடியாமல் அரசு அலுவலர்கள் மற்றும் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்தி வரும் பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தற்போது இலவசமாக 4ஜி சிம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையிலும் அதற்கான அறிவிப்பு பலகைகள் இலவச கிடைக்கும் என வைக்கப்பட்டுள்ளதே ஒழிய அலுவலகத்தில் திறக்க வழி இல்லாமல் உள்ளது. மேலும் இன்னமும் 4G சேவை துவங்கப்படாமல் உள்ளது. இது பற்றி சிலர் பி எஸ் என் எல் அலுஅலுவலகம் பற்றி இருக்கு ஆனா இல்லை என்று ஒரு படத்தில் நடிகர் சூரியா இருக்கு ஆனா இல்லை என்று கூறி நடித்துள்ளது போல் கமெண்ட் அடித்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு உரிய அதிகாரிகளை அலுவலர்களையும் டெக்னீசியன் உள்ளிட்டவர்களை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது