புதுக்கோட்டையில் எலுமிச்சை விலை கடும் சரிவு
புதுக்கோட்டையில் எலுமிச்சை விலை கடும் சரிவு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வடகாடு, மாங்காடு, நெடுவாசல், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை கொள்முதல் செய்யப்படும் நிலையில், வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனையான எலுமிச்சை தற்போது 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.