வினை தீர்க்கும் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது
பல்லடம் வடக்கு ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி- அய்யாவுநகரில் அமைந்துள்ள அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.இதில் பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பல்லடம் அதிமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கரைப்புதூர் A.நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் சோனைமுத்து மாவட்ட மீனவர் அணி பொருளாளர்,மற்றும் மகளிர் அணி, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.