முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-08 04:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். மாநில துணைத் தலைவர் ரஹீம், மாநில தலைவர் செல்வராஜ். மாவட்ட தலைவர் சர்ச்சில், மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஏசுதாஸ் கோரிக்கை விளக்கவுரை வழங்கினார். தமிழக அரசு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Similar News