ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் ஊர்வலத்தின் போது மோதல் காவல்துறையினர் -இந்து முன்னணியினரிடையே தள்ளுமுள்ளு

குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது

Update: 2024-09-08 16:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் ஊர்வலத்தின் போது மோதல் காவல்துறையினர் -இந்து முன்னணியினரிடையே தள்ளுமுள்ளு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்ஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 103 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து ஊர்வலமாக வைகைஅணைக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தனித்தனியே ஒவ்வொரு அமைப்பினராக சிலைகளை எடுத்து கரைப்பதற்காக செல்லும் போது முதலில் இந்து முன்னணி அமைப்பினருக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர் அப்போது போக்குவரத்து நெரிசலால் செல்வதில் தாமதம் ஏற்படவே தங்களுக்கு நேரம் ஆவதாக கூறி பின்னால் இருந்த இந்து மக்கள் கட்சியினர் முன்னேறி வந்து சாலையில் அமர்ந்து வாக்குவாதம் செய்தனர் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் காவல்துறையினரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த போது காவல்துறையினருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு மிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது மோதலை போல காவல்துறையினர் அவர்களை தள்ளி சென்று சாலையோரத்தில் விட்டனர் இதனால் குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் முதலில் இந்து முன்னணி அமைப்பினரின் விநாயகர் சிலைகளையும் பின்னர் தொடர்ச்சியாக இந்து மக்கள் கட்சி அமைப்பினரின் விநாயகர் சிலைகளையும் கரைப்பதற்காக அனுப்பி வைத்தனர் இதில் ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Similar News