நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரப்பகுதியில் 18 வார்டுகள் உள்ளன.தனியார் மண்டபத்தில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செல்வராஜ் தலைமை வைத்தார். பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் முன்னிலை வைத்தார்.மேலும் இந்த கூட்டத்திற்கு திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 7ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.