மலைவாழ் மக்களுக்கு நல உதவிகள் வழங்கிய கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக அலுவலர்கள்!
லிங்கமாவூர்
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி கோவை மற்றும் மழை உடுமலை அமைப்பு ஆகியோருடன் இணைந்து லிங்கமாவூரில் அரசு உண்டு உறைவிட பள்ளியில் மலைவாழ் கிராமங்களான ஈசல்தட்டு, குறுமலை, கரட்டுப்பதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கே.பி.ஆர் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தலைமை பேராசிரியர் சத்தியவதி, பேராசிரியர் ஜெயந்தி வாகினி , அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் ஆகியோர் மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கட், நாப்கின், மருந்து மாத்திரைகள், குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் என சுமார் 40 குடும்பங்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மழை உடுமலை அமைப்புடன் இணைந்து கல்லூரி மாணவர்களும், மலைவாழ் மக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து சிறப்பித்தனர். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்வை உடுமலை சமூக ஆர்வலர் ஜானகிராம் , சிகரங்கள் யோகானந்தம் ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.