ராமநாதபுரம் மகளிர் குழுக்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மங்களிர் சுய உதவி குழுக்களுக்கு 2,735,கோடி ரூபாய் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-09-09 08:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2,735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா ராமநாதபுரம் தனியார் மஹாலில் நடந்தது. இவ்விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்குவத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு தொகையை வழங்கினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர், கருமாணிக்கம்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன்,ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.கே.கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

Similar News