பல்லடம் அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த நாகப்பாம்பு.
பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது
பல்லடத்தை அடுத்த கரடிவாவியில் எஸ்.எல்.என்.எம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்தனர்.பள்ளியின் பொது இயந்திரவியல் வகுப்பறைக்கும் மாணவர்கள் வந்தனர்.அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்கில் இருந்து சப்தம் கேட்டது.என்னவென்று பார்த்த போது டெஸ்க்கிற்குள் பாம்பு ஒன்று இருந்தது. அதனை பார்த்ததும் மாணவ மாணவிகள் பயந்து அலறி அடித்து பள்ளி வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் மேலும் இது குறித்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்தனர்.டெஸ்க்கிற்குள் சென்ற பாம்பு வெளியே வரவில்லை. இதனை அடுத்து பாம்பு பிடி வீரர் அய்யம்பாளையத்தை சேர்ந்த சக்தி வடிவேல் என்பவருக்கு ஆசிரியர்கள் தகவல் அளித்தனர்.தகவல் கிடைத்து பள்ளிக்கு வந்த சக்தி வடிவில் டெஸ்கிக்குள் பதுங்கியிருந்த பாம்பினை பாதுகாப்பாக உயிருடன் மீட்டார். அதனை தொடர்ந்து மீட்ட பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.பள்ளி வகுப்பறைக்குள் பாம்பு புகுந்ததால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.