ராமநாதபுரம் அமைச்சர் ஆய்வு செய்தார்
ரோஸ்மா நகரில் கடல் அழைப்பை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ரோஸ்மா நகர் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், கடல் அரிப்பின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதி மக்கள் இங்கு தூண்டில் வளைவு மற்றும் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டுமென மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் விடுவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்தார்.