ஆண்டிபட்டி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

தேனி பகுதியில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகளும் மதுரை பகுதியில் இருந்து தேனி பகுதிக்கு செல்லும் பேருந்துகளும் சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் நெரிசல்

Update: 2024-09-09 15:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மதுரை, தேனி பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டியை கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.குமுளி, கூடலூர், கம்பம், போடி, தேனி பகுதியில் இருந்து உசிலம்பட்டி மதுரை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தினமும் 500க்கும் மேற்பட்ட முறை ஆண்டிபட்டியை கடந்து செல்கிறது. இதேபோல் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வழியாக தேனி, பெரியகுளம், கம்பம், போடி உட்பட பல ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கிறது. ஆண்டிபட்டியை கடந்து செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்வதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

Similar News