பொன்னமராவதியில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் பொன்னமராவதி வட்டக்கிளை சார்பில் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.