மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

கடனுதவி

Update: 2024-09-10 03:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி., பள்ளி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள 466 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 59.11 கோடி ரூபாய் மதிப்பலான வங்கி கடனுதவி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 7,895, நகர்ப்புற பகுதியில் 1,058 என மொத்தம் 8,953 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில் ஊரக பகுதியில் 95,460 உறுப்பினர்களும், நகரப் பகுதியில் 12,983 உறுப்பினர்கள் என மொத்தம் 1,08,443 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.506.82 கோடி, 2023--24-ல் ரூ.757 கோடி, 2024--25ஆம் நிதியாண்டு ரூ.274.11 கோடி, என கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,537.93 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் குறைந்தது 2 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களாவது கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை முறையாக கையாண்ட பின் வங்கிகள் கடனுதவி வழங்கப்படும். கடனுதவியை முறையாக செலுத்தியபின் வங்கிகள் மூலம் அடுத்தடுத்து கூடுதல் கடனுதவிகள் வழங்கப்படும். . இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Similar News