அரசு பள்ளி சார்பில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாட்டம்

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் உலக எழுத்தறிவு தினம் தலைமையாசிரியை பாரதி தலைமையில் கொண்டாடப்பட்டது

Update: 2024-09-10 08:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் உலக எழுத்தறிவு தினம் தலைமையாசிரியை பாரதி தலைமையில் கொண்டாடப்பட்டது. உலக எழுத்தறிவு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளியில் துவங்கி, பல முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. உலக எழுத்தறிவு தினம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். உலக எழுத்தறிவு தினம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் பெரியோர்களிடம் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற ஊராக மாற ஊக்குவிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் உலக எழுத்தறிவு தினம் குறித்து தன்னார்வலர் அருள்பிரியா பேசினார். பி.டி.ஏ. தலைவர் ஓபுளிராஜ் மாணவ, மாணவியர்கள், ஆசிரிய பெருமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.

Similar News