ஆண்டிப்பட்டியில் தனியார் பேருந்து மோதி காவலர் காயம் போலீசார் விசாரணை
தலைமை காவலர் அகமது அஸ்லாம் மீது தனியார் பேருந்து மோதி காயம் சிவக்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ள காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அகமது அஸ்லாம். இவர் ஆண்டிபட்டி முக்கிய சாலையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து அகமது அஸ்லம் மீது மோதியதாக தெரிகிறது இதனால் காவலர் அகமது அஸ்லாம் -க்கு காயம் ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்