ரீப்பர் கட்டைகளை பொதுப்பணித்துறை பொது ஏலம் விட கோரிக்கை...
சங்ககிரி:கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்ட ரீப்பர் கட்டைகளை பொதுப்பணித்துறை பொது ஏலம் விட கோரிக்கை...
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வழிப்பட்ட சிலைகள் கலைக்கப்பட்டது. அதே போல் இந்த சிலைகளை ஆற்றில் விடப்பட்ட சிலையின் அடி பீடத்திற்காக வைக்கப்பட்ட ரீப்பர் கட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது இதனை பொதுப்பணித்துறையின் பொது ஏலத்தில் விட்டு அதில் வரும் நிதிகளை கொண்டு ஆற்றங்கரையோரம் வளர்ந்து வரும் கருவேலம் மரங்கள், சிலைகளை விசர்ஜனம் செய்யும் போது போடப்பட்ட குப்பைகளை அகற்ற பயன்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவினை கொண்டாட பக்தர்கள் ஒரு அடிமுதல் பத்து அடி வரை உள்ள பல்வேறு வகையான விநயாகர் சிலைகளை விலைக்கு வாங்கி சென்று அந்தந்த பகுதிகளில் குழுவாக சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். அதனையடுத்து அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைத்து சென்றனர். இதே போல் சங்ககிரி வட்டம் கல்வடங்கம் காவிரி ஆற்றில் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குள்பட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வழிப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை கரைத்தனர். இதற்கு காவல், வருவாய், தீயணைப்புதுறையினர் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதலுடன் கரைக்கப்படடது பக்தர்கள் செய்த சிலைகள் இதில் ரீப்பர் கட்டையில் செய்த பீடத்தினை காவிரி ஆற்றங்கரையில் சேமித்து குவித்து வைக்கப்பட்டது குவித்து வைக்கப்பட்டுள்ள ரீப்பர் கட்டைகளை பொதுப்பணித்துறையினர் பொது ஏலத்திற்கு விடப்பட்டு அதிலிருந்து வரும் நிதிகளை கொண்டு ஆற்றங்கரையில் வளர்ந்து வரும் கருவேலம் மரங்களை அகற்றவும், விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்தபோது பக்தர்களால் விடப்பட்ட துணிகள், பூக்கள் கழிவுகளை அகற்ற பயன்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.