ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை தர வேண்டும்
ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை தர வேண்டும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோளியப்பள்ளி கிராமத்தில் 118 ஏக்கர் ஏரி உள்ளது இந்த ஏரி தமிழக அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்காமல் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கும் சாலை போடுவதற்காகவும் இந்த மண் அள்ளப்படுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மோளியப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலகம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தனியாருக்கு மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என்றும் விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதிகமாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள் கூறும்போது தமிழ்நாடு அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்கவும் தூர் வாரமவும் அனுமதி அளித்துள்ளது ஆனால் மோளியப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்காமல் தனியாருக்கு அனுமதி கொடுத்துள்ளனர் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்