நாமக்கல், திருச்செங்கோடு தொகுதி! அதிமுக கழக பொதுக் குழு உறுப்பினர் C.P.ராதா சந்திரசேகரன் விருப்ப மனு!!
நாமக்கல், திருச்செங்கோடு தொகுதி! அதிமுக கழக பொதுக் குழு உறுப்பினர் C.P.ராதா சந்திரசேகரன் விருப்ப மனு!!;
அதிமுக கழக பொதுக் குழு உறுப்பினர் C.P.ராதா சந்திரசேகரன் நாமக்கல், திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றன. இதற்கான விருப்பமான விநியோகத்தை கடந்த டிசம்பர் 15ம் தேதி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக கழக பொதுக்குழு உறுப்பினர் சி.பி.ராதா சந்திரசேகரன் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, நாமக்கல் சட்டமன்ற தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் விருப்பம் மனு தாக்கல் செய்தார். விருப்ப மனுவை, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அவர் மனுவை வழங்கினார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகோரி 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 4 முறை விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் 4 முறை திருசெங்கோடு, நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது, 5வது முறையாக மீண்டும் நாமக்கல், திருச்சங்கோடு தொகுதிகளுக்கு போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.