ராமநாதபுரம் திருடர்களை போலீசில் ஒப்படைப்பு
திருவாடானை அருகே மாடு திருடர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் இரண்டு பசுமாடுகளை டாடா ஏஸ் வாகனத்தில் திருடி ஏற்றி செல்லும் பொழுது அப்பகுதி இளைஞர்கள் பார்த்து வாகனத்தை விரட்டி சென்று சனவேலி அருகே மடக்கிப் பிடித்தனர். உடன் திருவாடானை காவல் துறை தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பெயர் சென்ற காவலர்கள் வண்டியுடன் திருடர்களை பிடித்து நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர மமாட்டின் உரிமையாளர்கள் கீரமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி வினிதா (30) சுரேஷ் மனைவி செல்வி (40 ) ஆகியோர்களது தெரிய வந்து இவர்களிடம் புகார் பெற்று விசாரித்து வருகின்றனர். இரண்டு பேர் சேர்ந்து திருடியதும், மாடுகளை மாலையில் பிடித்து புதுதாக கயர்களை மாற்றி கட்டி வைத்து விட்டு இரவில் டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி இன்று நடக்கும் பரமக்குடி சந்தையில் விற்று பணமாக்குவதை வழக்கம் என்று முதல்விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதி மட்டுமல்லாது பல்வேறு பகுதியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாடுகளை திருடியுள்ளனர் என பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.