ராமநாதபுரம் விழாக்கால ரயில்கள் இயக்கம் தென்னக ரயில்வே

சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

Update: 2024-09-12 11:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்ள்ளது. அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06103) செப்டம்பர் 19, 21, 23, 26, 28, 30 ஆகிய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) செப்டம்பர் 20, 22, 24, 27, 29, அக்டோபர் 1 ஆகிய வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Similar News