காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
திண்டுக்கல்லை சேர்ந்த நவநீதன் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நவநீதன் கார்த்திகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்களது பெற்றோரை அழைத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் விசாரணை செய்த போது கார்த்திகா திருமணம் செய்து கொண்ட நவநீதன் வீட்டிற்குச் செல்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு, நவநீதன் குடும்பத்தாருடன் கிளம்பிச் சென்றார்.