அரசு பள்ளியில் ஓவியப் போட்டி
குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு பிரிவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வென்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் பங்கேற்ற 35 மாணவ மாணவிகளுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் பி.டி.ஏ. தலைவர் சுந்தரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லதா, தமிழ் ஆசிரியர் குமார், ஓவிய ஆசிரியர் பழனிவேல் போட்டியை நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். பி.டி.ஏ. துணை தலைவர் முருகேசன், துணைச் செயலாளர் கோபால், முன்னாள் மாணவர்கள் சார்பில் காந்தி, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பகத்சிங் , உள்ளிட்ட தலைவர்களின் வண்ணப் புகைப்படங்களை மாணவர்களுக்கு வழங்கினர். மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த, தமிழக அரசு வழங்கிய தொடுதிரை வண்ண தொலைக்காட்சி இயக்குவது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விளக்கப்பட்டது.