தனியார் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய பொது மக்கள்

குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மனு அளித்த நிர்வாகிகள்

Update: 2024-09-13 16:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
Fl2 மதுபான கடைக்கு எதிர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணாநகர் மற்றும் அதை சுற்றி வசித்து வரும் சுமார் 2500 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இப்பகுதியில் பல்வேறு வீடுகளில் அருவாள்போன்ற ஆயுதங்கள் உடன் வந்து நள்ளிரவில் பல வீடுகளில் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். ஆகவே மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் தடுத்தி டும் வகையில் தமிழக அரசு இந்த மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி ஸ்ரீ கிருஷ்ணாநகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி நகர், சாரல் நகர், தனலட்சுமி நகர், பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்தலைவர், துணை ஆணையர், தாசில்தார், உயர்திரு. காவல்துறை துணை கண்காணிப்பாளர், உயர்திரு. காவல்துறை ஆய்வாளர் அவர்கள் அலுவலகத்தில் அனைத்து சங்கங்களின் சார்பாக புகார் மனு இன்று அளிக்கப்பட்டது.

Similar News