கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கொடைக்கானலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை நகராட்சித் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
கொடைக்கானலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை நகராட்சித் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பச்சைமரத்து ஓடைப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி சாா்பில் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் அகற்றவில்லை. இந்த நிலையில், பச்சைமரத்து ஓடைப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் நகராட்சி ஆணையா் சத்தியநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. அப்போது, காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.