கரூரில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வீர மரணம் தழுவிய தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம்.

கரூரில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வீர மரணம் தழுவிய தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம்.

Update: 2024-09-17 09:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வீர மரணம் தழுவிய தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம். வன்னியர் சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு கோரி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு வார காலம் போராட்டம் நடைபெற்றது.போராட்டம் இறுதியில் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், இன்று கரூர் மனோகரா கார்னர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை. பசுபதி, மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன், மாவட்ட அமைப்பு தலைவர் கொங்கு குணா, நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த தியாகிகளுக்கு மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

Similar News