திருமண மோசடி வழக்கில் கரூர் பெண் புரோக்கரை கைது செய்த காவல்துறையினர்

திருமண மோசடி வழக்கில் கரூர் பெண் புரோக்கரை கைது செய்த காவல்துறையினர்

Update: 2024-09-17 10:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமண மோசடி வழக்கில் கரூர் பெண் புரோக்கரை கைது செய்த காவல்துறையினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் மகேஷ். இவரை ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற இளம் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த பிறகு சத்யா பலரை திருமணம் செய்து ஏமாற்றியதை அரவிந்த் மகேஷ் கண்டுபிடித்தார். மேலும், இது தொடர்பாக தாராபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சத்யா பாண்டிச்சேரியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்து தாராபுரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். சத்யாவின் இந்த திருமணத்திற்கு உடந்தையாகவும், போலி திருமணம் செய்ய புரோக்கர் ஆகவும் செயல்பட்ட, கரூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் தமிழ்ச்செல்வி வயது 34 என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இதனிடைய கரூரில் பதுங்கி இருந்த தமிழ்ச்செல்வியை தாராபுரம் தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்த தமிழ்செல்வியை உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் சிலையில் தற்போது அடைத்துள்ளனர். பலரை ஏமாற்றி திருமணம் செய்வதற்கு உடந்தையாக,ஒரு புரோக்கராக தமிழ்செல்வி செயல்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News