பாஜக ஆட்சியில் டீசல் விலை குறையவில்லை: எம்.பி. குற்றச்சாட்டு
பாஜக ஆட்சியில் டீசல் பெட்ரோல் விலை குறையவில்லை என விஷ்ணு பிரசாத் எம்.பி. குற்றம் சாட்டினர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 டாலா் என இருந்தது. தற்போது 70 டாலா்ஆக குறைந்துள்ளது. ஆனாலும், விலையை நிா்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறையாமல் உள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது அவா்களுடைய கருத்து. காலங்கள் மாறும் போது அவா்களுடைய நிலைப்பாடும் மாறலாம். இப்போது அத்தனை பேரும் ஒற்றுமையாக உள்ளோம். தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. இதற்கு மத்திய அரசு உரிய பதிலடி தர வேண்டும். மது ஒழிப்பு நாட்டிற்கு தேவையானது. அதை காங்கிரஸ் என்றென்றும் வரவேற்கிறது என்றாா்."