சட்ட விரோதமாக மது விற்றவர் கைது : மது பாட்டில்கள் பறிமுதல்
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது : 441 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். 441 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு இன்று மது கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி வி.ஈ. ரோடு அந்தோணியார் கோவில் அருகில் உள்ள ஒரு மதுபான கடை பார் அருகே சாக்கு முட்டையில் வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் தூத்துக்குடி இரத்தினசாமிபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த தயாளன் மகன் பியோ சாமி (49) என்பதும், சட்ட விரோதமாக மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 441 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.