மாநகராட்சி வாகனங்களால் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் மாநகராட்சி கழிவுநீர் வாகனங்கள் வெளியிடும் கரும் புகையால் மக்களுக்கு பல்வேறு சுவாச கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Update: 2024-09-18 13:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான கழிவு நீர் வாகனங்கள் நகரில் வலம் வருகின்றன. இந்த வாகனங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதாகவும், இந்த வாகனங்கள் வெளியிடும் கரும்புகையால் குழந்தைகள், முதியவர்கள் உட்பட பொதுமக்களுக்கு பல்வேறு சுவாச கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தூத்துக்குடியில் சமீப காலமாக காற்று மாசு குறைந்து வருவதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநகராட்சி வாகனங்கள் வெளியிடும் வாகனங்களால் காற்று மாசு அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிககை எடுக்க என்றும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News