கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த முகமது ஹாலிக்,33; இவர் அதே பகுதியில் 'இண்டர்நெட் சென்டர்' வைத்துள்ளார். கடந்த ஆக.,21ம் தேதி இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், கிரடிட் கார்டுக்கு பில் கட்ட வேண்டும் என்றும், தனது ஜி-பே எண்ணிற்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் திருப்பி அனுப்பி விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முகமது ஹாலிக், அந்த வாலிபர் கூறிய ஜி-பே எண்ணிற்கு பணம் அனுப்பினார். ஆனால் அந்த வாலிபர், பணத்தை திருப்பி அனுப்பாமல் தப்பி சென்றுள்ளார்.இதேபோல், சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை,32; என்பவரிடமும் ரூ.50 ஆயிரம் பணத்தை ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம், காட்டம்பூண்டி, சுக்கம்பாளையம் லிங்கம் நகரை சேர்ந்த சக்திவேல் மகன் சுபாஷ்,26; என்பவர் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. அவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் இதே பாணியில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.