சின்னசேலம் ஒன்றியம் ஈரியூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லசேவிபுரத்தில் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் முயற்சியின் பேரில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கடப்பட்ட புதிய ரேஷன் கடையை செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நேற்று துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் கொளஞ்சி பொன்னுசாமி முன்னிலை வகித்தார். சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், வேல்முருகன், ஊராட்சி துணை தலைவர் கொளஞ்சி பொன்னுசாமி, ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார், நிர்வாகிகள் கருப்பன், ஆனந்தசெல்வம், ஊராட்சி தலைவர்கள் அஞ்சலை, கனகவள்ளி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.