சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அடுத்த சேர்வாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்திவேல்,43; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோட்டில் இருந்து நைனார்பாளையம் நோக்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.