ராமநாதபுரம் ரயில்வே மேம்பாலம் சிறப்பு
ராமநாதபுரம் கீழக்கரை உயர் மட்ட பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்
இராமநாதபுரம் ராமநாதபுரத்தில் இருந்து சக்கரைகோட்டை வழியாக செல்லும் வழித்தடத்தில் ரயில்வே பாதை அமைந்துள்ளனர். ரயில்கள் தொடர்ந்து செல்லும் போது பாதை மூடப்படும் இதனால் வாகன ஓட்டிகள் சீரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், 30 கோடி மதிப்பிட்டில் உயர் மட்ட பாலம் மற்றும் இரு புறமுகம் அனுகு சாலை அமைக்கப்பட்டது. இதில், பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இருந்தனர்.இதனால் கால தாமதம் ஆன நிலையில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை மக்கள் பயன்பாட்டுக்கான பிரதான சாலை என வாதிடப்பட்டது. மேலும் வழக்கு தொடர்ந்தவர்களை அதிகாரிகள் சந்தித்து அதற்கான தீர்வு ஏற்படுத்தினர். வழக்கு திரும்ப பெறப்பட்ட நிலையில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது. ராமநாதபுரம் கீழக்கரை பாலம் உயர் மட்ட பாலம் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்,செ.முருகேசன்,ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம்,துணைத்தலைவர் பிரவீன்தங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்