திருப்பூர் மாநகரர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை!
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலிசார் அதிரடி சோதனை செய்தனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக லட்சுமி பொறுப்பேற்றதில் இருந்து குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி பாதுகாப்பு பணி களை மேற்கொண்டு வரு கிறார். லாட்ஜ்களில் அதிரடி சோதனை இந்தநிலையில் மாநகர் பகுதியில் போைத பொருட்கள் பதுக்கி வைக்க ப்பட்டு விற்பனை செய்யப்ப டுவதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தினர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி இன்று அதிகாலை 3-30 மணி யளவில் திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீ சார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 120 போலீசார் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக பிரிந்து மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள அறைகளில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். போதை பொருட்கள் பறிமுதல் மேலும் அங்கு தங்கியி ருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் எதற்காக அங்கு தங்கி உள்ளனர், எங்கு வேலை பார்க்கிறார்கள் , உரிய ஆவணங்கள் உள்ளதா என்று விசாரணை நடத்தி யதுடன், ஆவணங்களை வாங்கி சரிப்பார்த்தனர். போைத பொருட்கள் பதுக்கி வைத்துள்ளனரா என்று அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 கிராம் கஞ்சா, ஒரு கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகப்படும்படியாக தங்கியிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். வங்கதேசத்தினர்- தடை செய்யப்பட்ட அமைப்பினர் யாரும் தங்கி உள்ளனரா? என்றும் சோதனை நடத்த ப்பட்டது. பரபரப்பு லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதால் அங்கு தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த சோதனையால் திருப்பூர் மாநகரில் இன்று அதிகாலை பரபரப்பு நிலவியது. இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறுகையில், திருப்பூரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான். நேரத்தை மாற்றி இன்று அதிகாலை சோதனை நடத்தி உள்ளோம். வெளி மாநில-வெளி மாவட்டங்களில் குற்ற ச்செயல்களில் ஈடுபட்டு இங்கு வந்து யாரும் தங்கி உள்ளனரா? என்று சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியான நபர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.