ராமநாதபுரம் ஊரணி தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது
கீழக்கரையில் பாலையாறு ஊரணி மறுசீரமைக்க பணி நடைபெற்று வருகிறது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, காஞ்சிரங்குடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலையாறு, சுத்தம் செய்தல் மற்றும் தூர்வாரும் பணிகளில் நீர்நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கையை கீழக்கரை நகராட்சி மற்றும் காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை ஒத்துழைப்புடன் கீழக்கரையின் சமூக நலனில் அக்கறை கொண்ட செல்வந்தர்கள், இயற்கை ஆர்வலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில் நடை பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கும் முன்பு இது குறித்து சமூக ஆர்வலர்களுடன் உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்க தலைவரான முஜீப் கலந்த ஆலோசனை செய்யப்பட்டு தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தன்னுடைய சகோதரர் அமீர் ஹாஜியார், மற்றும் சமூக சேவைகள் செய்து வரும் தொழிலதிபர் சிங்கப்பூர் சதக் , துபாய் AJ.கமால் ஆகியோருடன் இணைந்து கருவேல மரங்களை அகற்றி நீர் நிலையை பாதுகாக்கும் பணிகளை செய்து வருகின்றனர் . இப்பணியின் மூலம் விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. மேலும் நீர் நிலைகள் பாதுகாப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் இப்ப பணி செய்வது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது . மேலும் இதன் மூலம் பறவைகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.