பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் 8 பேருந்துகளில், பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட இணை தலைமை சுற்றுச்சூழல் அலுவலர் ரவி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் சர்மிளா ஆகியோர் அடங்கிய குழுவினர் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.