மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார்

Update: 2024-09-21 16:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கம்மாபுரம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கோபாலபுரம் காளிங்கராயர் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பாஜக தலைவர் தர்விந்தர் சிங் மர்வா பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார், அதில் அவர் ராகுல் காந்தியே, நிறுத்துங்கள், இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும், எனக் கூறியிருப்பது பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துகிறது. ராகுல்காந்தி குறித்த இத்தகைய பேச்சுக்கள் பொது மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலும், வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் கலவரம், அமைதிக்கு குந்தகம் போன்றவற்றைத் தூண்டிவிடும் வகையில் அமைகின்றன. இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பைக் குலைக்க நினைக்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர் பொது மக்களிடையே பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பேசி, அதை காட்சி ஊடங்கள் மற்றும் பிற வழிகளில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வேண்டுமென்றே திட்டமிட்டுபரப்பி வருகின்றனர். அதனால் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவல் கூறப்பட்டிருந்தது. இதேபோல காங்கிரஸ் கட்சியினர் ஊமங்களும் மற்றும் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு கொடுத்தனர்.

Similar News